Saturday, December 9, 2023
HomeStickerகோட்டாபயவின் குடும்பத்திற்கு வந்த மிரட்டல் அழைப்பு

கோட்டாபயவின் குடும்பத்திற்கு வந்த மிரட்டல் அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொலன்னாவ பிரதேசத்தில் சலூன் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த நபர் ஒருவர் அவரிடம் 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளார்.

தொடர்ந்து அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தான் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி எனவும் இவ்வாறு அழைப்பேற்படுவதனை நிறுத்துமாறும் அயோமா ராஜபக்ச குறித்த நபரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் யாரிடம் பேசுகிறேன் என தனக்கு தெரியும் என அழைப்பேற்படுத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இனியும் தாமதிக்காமல் பத்து லட்சம் ரூபாய் தொகையை தரும்படி கேட்டுள்ளார்.

இல்லை என்றால் முதல் முறை போல் இல்லாமல் சுனாமி போல் கூட்டத்தை கொண்டு வந்து வீட்டை சுற்றி வளைத்து துரத்தியடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நபரிடம் இருந்து பல மிரட்டல் அழைப்புகள் வந்ததையடுத்து, அயோமா ராஜபக்ஷ இது குறித்து முன்னாள் ஜனாதிபதி பணியாளருக்கு தெரிவித்தார்.

அதன் பின்னர் அவர் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த நபரை நேற்று கைது செய்துள்ளனர்.

இந்த நபருக்கு அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் எவ்வாறு கிடைத்தது என்பது புலனாய்வுத் திணைக்களத்தின் கவனத்திற்குள்ளாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments