ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசிக்காரர்களுக்கு ஒக்டோபர் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் இவர்கள் லக்ஷ்மி தேவியின் அருளால் பணமும், தொழிலில் முன்னேற்றமும் அடைவார்கள்.
ஒக்டோபர் மாதம் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை அளிக்கும் என்றாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் மிகவும் அதிகப்படியான நற்பயன்களை பெறுவார்கள்.
ஒக்டோபர் மாதத்தில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள்:
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒக்டோபர் மாதம் சுப பலன்களை அள்ளித் தரும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் லாபகரமானதாக இருக்கும்.
உங்களது கடின உழைப்பு மற்றும் பொறுமையின் பலனை நீங்கள் அறுவடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கும் ஒக்டோபர் மாதம் சிறப்பாக இருக்கும். தொழிலில் சாதகமான காலம் அமையும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.
பணியிடத்திலும் தொழிலிலும் நல்ல செயல்திறனுடன் பணிபுரிவீர்கள். திருமண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒக்டோபர் மாதம் மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித் தரும். தேர்வில் வெற்றி உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும் ஆனால் வருமானமும் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பார்க்காத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு ஒக்டோபர் மாதம் பல நன்மைகளைத் தரும். தொழில், நிதி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் சாதகமான சூழல் இருக்கும். வாழ்க்கை துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு ஒக்டோபர் மாதம் நல்ல பலன்களைத் தரும். அனைத்து துறைகளிலும் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு ஒக்டோபர் மாதம் சாதகமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் பெரும் லாபம் உண்டாகும். குறிப்பாக வெளியூரில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் அடைவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டு. இந்த பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருனங்களை செலவிடுவீர்கள்.