பொதுவாக முகத்தின் அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கும் உதட்டை பராமரிப்பது அவசியம்.
சிலருக்கு முகம் மிகவும் பளிச்சென இருக்கும், ஆனால் உதட்டில் வெடிப்பு அல்லது கருப்பு படிந்திருக்கும். இதற்கான பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கிப்போடுவதுண்டு. ஆனால் இது தற்காலிகம் தான்.
உதட்டினை எளியமுறையில் கூட அழகாக கவர்ச்சியாகவும் மாற்ற முடியும். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
2 டீஸ்பூன் சர்க்கரை ,1 தேக்கரண்டி தேன்,1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து, உதடுகளில் தினமும் இருமுறை தடவவும். இந்த கலவையை காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைத்து பயன்படுத்துங்கள்.
ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணிலா பீன்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். அவற்றுடன் ¼ கப் தேங்காய் சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயையும் சேர்த்து நன்கு கலக்கும். இப்போது, காற்று புகாத கொள்கலனில் சேமித்து, உங்கள் உதடுகளில் பயன்படுத்துங்கள்.

1 தேக்கரண்டி பழுப்பு சர்க்கரை ,1 தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை ,1 தேக்கரண்டி தேன் ,½ தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பேஸ்டாக மாற்றவும். இந்த பேஸ்டை ஒவ்வொரு நாளும் உங்கள் உதடுகளில் தடவவும். பின்னர், காற்று புகாத கொள்கலனில் இதை சேமித்து வைத்து பயன்படுத்தவும்.