Tuesday, March 21, 2023
Homeஆரோக்கியம்தினமும் ஒரு கப் கறிவேப்பிலை டீ குடிங்க! இந்த நன்மைகள் எல்லாம் உங்களை வந்து சேரும்

தினமும் ஒரு கப் கறிவேப்பிலை டீ குடிங்க! இந்த நன்மைகள் எல்லாம் உங்களை வந்து சேரும்

நாம் சமையலுக்கு அன்றாடம் சேர்க்கும் கறிவேப்பிலை உடலில் பல மாயங்களை செய்யக்கூடியது.

கறிவேப்பிலை உடலில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை கொண்டு டீ தயாரித்துக் குடிப்பது இன்னும் பல பலன்களை தருகின்றது. அந்தவகையில் கறிவேப்பிலை டீயை எப்படி தயாரிப்பது? இதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

டீ தயாரிப்பது எப்படி?

முதலில் ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையை போட்டு, அரை மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

முக்கியமாக கறிவேப்பிலை டீயின் முழு பலனைப் பெற வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நன்மைகள்

கறிவேப்பிலை டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள அன்டி-ஒக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் உடல் செல்கள் சேதமடைமடைவதைத் தடுக்கின்றன.

கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், மருத்துவரின் அனுமதியைப் பெற்று கறிவேப்பிலை டீயைக் குடிக்கலாம்.

கறிவேப்பிலையில் மலமிளக்கி பண்புகள் உள்ளதால், இது குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைப் போக்கும். மேலும் இந்த டீயைக் குடிப்பதன் மூலம் வாய்வுத் தொல்லை பிரச்சனை நீங்கும்.

கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், கர்ப்பிணிகள் வாந்தி, குமட்டல் மற்றும் காலைச் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த டீயைக் குடிக்கும் முன் மருத்துவரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இது பொடுகுத் தொல்லை, தலைமுடி உதிர்வு, முடி ஒல்லியாவது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.

கறிவேப்பிலை டீயை தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் சுத்தமாக இருப்பதோடு, தொப்பையும் குறைவதைக் காணலாம்.

கறிவேப்பிலை டீயை தினசரி குடிப்பதன் மூலம், மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments