Tuesday, March 21, 2023
HomeStickerமுகப்பரு இல்லாத முகம் வேண்டுமா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்

முகப்பரு இல்லாத முகம் வேண்டுமா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்

பொதுவாக முருங்கை இலையில் வைட்டமின்கள், புரதங்கள், இரும்புச்சத்து, மினரல்கள், பைட்டோ கெமிக்கல் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக முகப்பருக்கள் உள்ள சருமத்துக்கு முருங்கை இலை உதவியாக இருக்கும்.

இவை பருக்களை சரிசெய்வதோடு, பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் தழும்புகளையும் சரிசெய்யும்.

அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.


தேவையான பொருள்கள்

முருங்கை இலை பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
தேன் – அரை ஸ்பூன்
ரோஸ் வோட்டர் (அ) எலுமிச்சை – 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முருங்கை இலை பொடி, தேன், மஞ்சள் ஆகியவற்றுடன் தேன் மற்றும் ரோஸ் வோட்டரை கலந்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும்.

முகத்தை காய்ச்சாத பால் கொண்டு காட்டனில் ஒற்றி எடுத்து முதலில் கிளன்சிங் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு கலந்து வைத்திருக்கும் பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை குறைந்தது 15 நிமிடங்கள் வைத்திருந்தால் போதும். பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவிக் கொள்ளலாம்.

வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தினால் போதும். நல்ல பலன் கிடைக்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments