இன்றைய காலத்தில் பலருக்கு திடீர் மாரடைப்பு வருவதுண்டு.
இதயத்திற்கு இரத்தம் இல்லாததால் திடீரென மாரடைப்பு ஏற்படலாம். இதற்கு விரைவான முதலுதவி நடவடிக்கை எடுப்பது அவசியமானதாகும்.
அந்தவகையில் மாரடைப்பு வந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
அறிகுறி

மார்பு வலி/அசௌகரியம்/அழுத்தம் போன்ற அறிகுறிகளைத் தவிர, மாரடைப்புகள் ஆண்கள் மற்றும் பெண்களிடமும், நீரிழிவு போன்ற சில முன்பே இருக்கும் சுகாதார நிலைகள் உள்ளவர்களிடமும் வித்தியாசமாக இருக்கலாம்.
மோசமான அஜீரணம் அல்லது குமட்டல், மிகுந்த சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் பொதுவாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பது ஆகியவை இதில் முக்கியமானது.
என்ன செய்ய வேண்டும்?
சிறந்த மருத்துவ உதவி கிடைக்கும் வரை, நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.
ஒக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.
நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் கிடைக்கப்பெற்றால் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.
நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.