Tuesday, March 21, 2023
HomeStickerஅதிர்ஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள் - அதிலும் மகர ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

அதிர்ஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள் – அதிலும் மகர ராசிக்காரர்களுக்கு – இன்றைய ராசிபலன்

மேஷம்
மேஷ ராசியினர் இன்றைய தினம் புதிய முயற்சிகளில் எதுவும் ஈடுபட வேண்டாம். தம்பதிகளிடையே மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு லாபம் உண்டாகும். உடல் நலத்தில் அக்கறை செலுத்தவேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் இன்றைய தினம் தாராள பொருள் வரவு கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியினர் இன்றைய தினம் உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு பணம் கொடுக்கல் – வாங்கலில் இழுபறி நிலை நீடிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருப்பதால் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நலம். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.


சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் வருமானம் கிடைக்கும். உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி
கன்னி ராசியினர் இன்றைய தினம் மக்களிடம் செல்வாக்கை பெறுவார்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் சராசரியான நிலையே இருக்கும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கலைத் தொழிலில் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு பெறுவார்கள். குடும்பத்தினரால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பணம் தொடர்பான விடயங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் சுமாரான நிலையே இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியினர் இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவார்கள். ஈடுபட்ட காரியங்களில் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். சிலர் குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவார்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்
மகர ராசியினர் இன்றைய தினம் உடல் மற்றும் மனம் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலை காணப்படும். சிலருக்கு தொலை தூரப் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிறருக்கு கொடுத்த கடன் தொகையை வட்டியுடன் திரும்ப வந்து சேரும்.

கும்பம்
கும்பம் ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைக்கலாம். ஒரு சிலர் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

மீனம்
மீன ராசியினர் இன்றைய தினம் பொருளாதார ஏற்றம் காண்பார்கள். பணியிடங்களில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். குடும்பத்தில் பெண்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீன் அலைச்சலால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments