Tuesday, March 21, 2023
HomeStickerவெளிநாடொன்றில் பல நூறு கோடிகளை பெற்ற இலங்கையர்! திறமைக்கு கிடைத்த பரிசு

வெளிநாடொன்றில் பல நூறு கோடிகளை பெற்ற இலங்கையர்! திறமைக்கு கிடைத்த பரிசு

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை தளமாகக் கொண்ட நிறுவனம் கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலியை கண்டுபிடித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூளையாக இருப்பவர் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே.

இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்.

அதன் அடிப்படையில் ‘ரெஸ்ஆப்’ (ResApp) என்ற செயலியை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த செயலியானது, கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடித்துவிடும்.

இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், காய்ச்சல் போன்ற எளிய அறிகுறிகளைக்கொண்டே ஒருவருக்கு கொரோனா மாதிரியான வியாதி ஏற்பட்டிருக்கிறதா, அது எந்த அளவு தீவிரமாக உள்ளது என்று இந்த செயலி தெரிவித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த செயலி 92 சதவீதம் துல்லியமாக முடிவுகளை வெளியிடுவதாகவும் இதை உருவாக்கியுள்ள நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய உயிர் மருத்துவ தொழில் நிறுவனமான பைசர் இந்த செயலியை $179 மில்லியன் கொடுத்து வாங்கியுள்ளது.


இந்த பணத்தை உடாந்த பெற்றுள்ளார். பல்வேறு கட்ட பரிசோதனைகள், மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலுக்கு பிறகே இந்த செல்போன் செயலி வெளிப்பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

பைசர் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த முக்கியமான தயாரிப்பை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு வர நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

இந்த நோயைத் தணிக்கும் நோக்கில் நுகர்வோருக்கு புதிய தீர்வுகளை வழங்குவதற்கான அடுத்த படியாக கோவிட்-19 ஸ்கிரீனிங் கருவி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments