ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசிபலனை அறிந்துக்கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.
இதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களை திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும்.
கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கிரகங்களின் சேர்க்கையால் எதிர்பாராத தனயோகம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்
மேஷத்தில் பிறந்த நீங்கள் இன்று எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் பயணங்கள் மூலம் புதிய நபர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் யோகம் வரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்த நீங்கள் இன்று எப்பொழுது மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களை சுற்றி இருக்கும் பலரும் எதிர்க்க வாய்ப்புகள் இருப்பதால் மனதை தளர விட வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதில் இடையூறுகள் வரும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்
மிதுனத்தில் பிறந்த நீங்கள் இன்று புது பொலிவுடன் காணப்படுவீர்கள். இதுவரை உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்க தெளிவு பிறக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும். மறைமுக எதிரிகளின் தொல்லையை சமாளிக்க போராடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வருமானம் உயரும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
கடகம்
கடகத்தில் பிறந்த நீங்கள் இன்று உங்களுடைய கடமையிலிருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தேவையற்ற இடங்களுக்கு பிரயாணம் செல்வதை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பணவரவு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன் வாங்கும் சூழ்நிலையை மாற்றுவது நல்லது. உடல் நலனில் அக்கறை தேவை.
சிம்மம்
சிம்மத்தில் பிறந்த நீங்கள் இன்று துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமைந்திருக்கிறது. சுபகாரிய தடைகள் விலகும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணம் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் சீராகும்.
கன்னி
கன்னியில் பிறந்த நீங்கள் இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை பெரிதாக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் நலம் தேறும்.
துலாம்
துலாத்தில் பிறந்த நீங்கள் இன்று வேகத்தை விட விவேகமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் விரிசல் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுப காரியங்களில் வீண் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. உடல்நல பராமரிப்பு தேவை.
விருச்சிகம்
விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் இன்று எதிர்பாராத விஷயங்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் கசப்புகள் தீரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் நன்மதிப்பு உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
தனுசு
தனுசில் பிறந்த நீங்கள் இன்று உங்களுடைய பேச்சில் இனிமையை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் பெருகும். எடுத்த முயற்சிகளில் வெற்றிவாகை சூடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
மகரத்தில் பிறந்த நீங்கள் இன்று உங்களுடைய திறமையை வெளி உணரக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுபகாரிய தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க கூடும். வெளியிட பயணங்களில் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகள் வந்து நீங்கும்.
கும்பம்
கும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை புதிய நபர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். நட்பு வட்டாரம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாகும் என்பதால் விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியத்தில் வீண் விரயங்கள் வரலாம் கவனம் வேண்டும்.
மீனம்
மீனத்தில் பிறந்த நீங்கள் இன்று எதிலும் அவசரம் காட்டாமல் பொறுமை காப்பது நல்லது. பதறாத காரியம் சிதறாது என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.