முகநூல் நண்பர் ஒருவரின் சுவாரஸ்யமான பதிவு மரவள்ளி புட்டு செய்முறை ..
மரவள்ளிக்கிழங்கு மாவில் புட்டும், முருங்கைக்காய், கருவாட்டு குழம்பும். நல்ல மெதுமையாக இருந்தது. அரிசி மா புட்டு போல் தான் இருக்கு, ஆனால் கிழங்கின் கசப்பு தன்மை கொஞ்சூண்டு தெரியிது. முதல் தடவை என்பதனால் அதிகம் சாப்பிட முடியல்ல.

நான் சாப்பிட்டன எனக்கொன்றும் ஆகல்ல. ஆனாலும் சோதனை எலிகள் வரவேற்கப்படுகின்றார்கள். சாப்பிடலாம் வாங்கோ.
மரவள்ளிக்கிழங்கு மாவில் புட்டு செய்முறை
1. ஒன்றை கிலோ கிழங்கு வாங்கி வந்தேன்.
2.தோல் சீவி தண்ணிக்குள் போட்டு சின்ன துண்டுகளாக வெட்டி திரும்ப தண்ணிக்குள் போட்டு கழுவினேன்.
3. பின் அதை சுளகில் போட்டு பரப்பி நீர் வடிய ஒரு நாள் விட்டேன்.
4. மறு நாள் வெயில் எறிச்சது, வெயிலில் சுளகோடு வைச்சேன், ஆனால் கிழங்கு காயும் அளவு வெயில் காணாது
5. ஓவனில் கிரில் சிஸ்டத்தில் பத்து நிமிடம் வைச்சி எடுத்து ஆற விட்டு கிரைண்டரில் போட்டு மாவாக்கி கொண்டேன்.
6. புட்டுக்கு மா பிசைவது போல் பிசைந்து தேங்காய் துருவல் சேர்த்து நீத்து பெட்டியில் போட்டு ஆவியில் வேக வைச்சேன்.
மரவள்ளி கிழங்கு புட்டு சாப்பிடலாம் வாங்க.
ஆல்ப்ஸ்_தென்றல்_நிஷா