ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரைச்சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள்.
ஒருவர் செய்யும் செயல்கள் நன்றாக இருந்தால், அவரது கர்மாக்கள் நன்றாக இருந்தால், சனி பகவான் அவரது ஜாதகத்தில் அசுப ஸ்தானத்தில் இல்லாமல் இருந்தால், சனியின் கோபத்திலிருந்து அந்த நபர் தப்பித்துகொள்ளலாம்.
இல்லையெனில் சனி பகவான் பல வித இன்னல்களை கொடுப்பார். தற்போது 3 ராசிகளுக்கு ஏழரைச் சனி நடந்து வருகிறது.
குறிப்பிட்ட சில ராசிகள் சனியின் கோபத்தில் இருந்து தப்பித்து பிழைக்கும் ராசிகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ரிஷபம்:

சனிபகவான் கருணையால் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது. சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.
பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இந்த நேரம் சாதகமான நேரமாக இருக்கும்.
மீனம்:
சனியின் கருணையால் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு வருமானம் கூடும். புதிய வருமானம் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி உண்டாகும். புதிய தொழில், உறவுகள் உருவாகலாம்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தை முடிப்பீர்கள். இந்த காலத்தில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில் மற்றும் வியாபாரத்திற்கு சாதகமானது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் திடீர் பணவர அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். பேச்சு மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சிறந்ததாக இருக்கும்.
இந்த காலத்தில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இந்த நேரம் சாதகமான நேரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.