ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் ராசியை அதன் குறிப்பிட்ட நேரத்தில் மாற்றுகிறது. ஒவ்வொரு மாதமும் பல முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன அல்லது தனது நிலையை மாற்றிக் கொள்கின்றன.
நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், நவம்பர் 11 முதல் நவம்பர் 24 வரை, 5 முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி ஆகப் போகின்றன.
நவம்பர் 11ம் தேதி சுக்கிரன் மீனத்திலும், 13ம் தேதியில் செவ்வாய் மற்றும் புதனும், 16ம் தேதி சூரிய பகவானும், 24ம் தேதி குரு பகவான் மீன ராசி வகர நிவர்த்தி ஆகின்றனர்.
எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சிகளாலும், நிலை மாற்றத்தினாலும், குறிப்பாக பலன் அளிக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்கள் குரு பகவானின் வக்ர நிவர்த்தியினால் பலன் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் பரம்பரை அல்லது பிற வழிகளில் இருந்து தன லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், சூரியனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களை பொருத்தவரை, ஆராய்ச்சி அல்லது கல்வித் துறையில் உள்ள நபர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் சுக்கிரன் சஞ்சாரம் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். பொதுவாக, இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக வலுப்பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவம்பரில் கிரகங்களின் சஞ்சாரம் பலன் தரும். கடக ராசிக்காரர்களுக்கு சூரிய சஞ்சாரமும், வக்ர நிவர்த்தி அடையும் குருவும் சுப பலன்களைத் தரப் போகிறது. இந்த நேரத்தில் இவர்கள் பணியில் ஆதாயம், அங்கீகாரம் பெறலாம்.
வியாபாரத்தில் லாபம் பெறலாம். அதே சமயம் மாணவர்களுக்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரப்போகிறது. விருச்சிக ராசியில் சுக்கிரனின் மாற்றம் லாபத்தையும் செழிப்பையும் தரும். அதே சமயம் செவ்வாய்ப் பெயர்ச்சி மாணவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வியாபாரத்தில் இவர்களுக்கு புதன் பலன்களை அள்ளித தரும்.அதே நேரத்தில் சில சொந்தக்காரர்களும் இந்த காலகட்டத்தில் தொழில் தொடங்க திட்டமிடலாம்.
கன்னி
ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்காரர்கள் நவம்பரில் நல்ல முன்னேற்றம் அடையப் போகிறார்கள். சூரியக் கடவுள் மற்றும் குரு பகவான் நல்ல நிலையில் இருப்பதால் நன்மைகள் கிடைக்கும். MNC நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். பெயர்ச்சி காலத்தின் போது கன்னி ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறலாம்.