Tuesday, March 21, 2023
HomeSticker8ஆம் திகதி சந்திர கிரகணம்! இலங்கையர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு

8ஆம் திகதி சந்திர கிரகணம்! இலங்கையர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு

சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், எதிர்வரும் 8ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும்.

இருப்பினும், சந்திர கிரகணம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழு அளவிலான சந்திர கிரகணமாக தென்படும்.


இதற்கமைய, 8 ஆம் திகதி மாலை 5.48க்கு சந்திரன் உதயமாகும் என்பதுடன், சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும்.

மாலை 6.19க்கு பகுதியளவான சந்திர கிரகணம் நிறைவடையும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments