Tuesday, March 21, 2023
HomeStickerநவம்பரில் ராசியை மாற்றும் கிரகங்கள் : அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 5 ராசிகள்

நவம்பரில் ராசியை மாற்றும் கிரகங்கள் : அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 5 ராசிகள்

நவம்பரில் ஐந்து கிரகங்கள் ராசி மாறுகின்றன. அதனால்தான் இந்த மாதம் மிகவும் முக்கியமானது.

இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இது பலன்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த ராசி மாற்றத்தால் நன்மை அடைவார்கள். பணியில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த ராசி மாற்றம் மாணவர்களுக்கு நல்ல செய்திகளையும் தரும். வேலை மாறத் திட்டமிடுபவர்களுக்கு இந்த மாதம் நல்லது.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் துறையில் ஆதாயம் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். இதன் காரணமாக நிதி நிலைமை வலுவாக இருக்கும். நவம்பரில் இந்த ராசி மாற்றம் தொழிலதிபர்களுக்கு நன்மை தரும். வீடு வாங்கும் கனவு நனவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சாதகமாக இருக்கும். ஊடகம், சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். இந்த ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல நன்மைகள் கிடைக்கும். இந்த மாதம் அனைத்து வேலைகளிலும் அதிர்ஷ்டம் இருக்கும். அது நிறைய பணத்தை கொண்டு வரும். வியாபாரிகளுக்கும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். அனைத்து வேலைகளும் முடிவடையும். வருமானம் அதிகமாக இருக்கும். செலவுகள் குறையும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். வேலை தேடுபவர்கள், வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments