பொதுவாக இன்றைய காலத்தில் பல பெண்களுக்கு வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்.
அதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் இதனால் சரும ஆரோக்கியம் தான் பாழாகும்.
அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, சருமமும் நீண்ட காலம் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.
இதற்கு பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவது நன்மையே தரும்.
அந்தவகையில் தற்போது பேக்கிங் சோடாவை எதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து அதை முகத்தில் தடவி 5-10 நிமிடம் நன்கு காய வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரிலும் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால், சரும நிறம் வெள்ளையாவதோடு, சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.
2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், 3 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொண்டு (சருமம் சென்சிடிவ் என்றால், வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, பின் அதைப் பயன்படுத்த வேண்டும்) முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், 1/4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 3-4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது தக்காளி சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, சருமத்தை மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்தில் அதிகமாக சுரக்கும் எண்ணெய் பசையைக் குறைக்கும்.
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது சருமத்தில் உள்ள தழும்புகள், சரும கருமை, கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்குவதில் சிறந்தது