Monday, November 28, 2022
HomeStickerபல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் மேலும் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பொருட்களுக்கான விலை குறைப்பை நாளை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டு 265 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வௌ்ளைப்பூடுவின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு 495 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.


மேலும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 43 ரூபாவினால் குறைக்கப்பட்ட 255 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments