யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதி சமிக்ஞைகளை மீறியதுடன் பொலிஸாருடைய கட்டளைகளை மதிக்காமல் தப்பி ஓடிய சந்தேகநபருக்கு 45 ஆயிரம் ரூபாய் தண்டம் மற்றும் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் வீதிக் கடமையில் இருந்த போது மோட்டார் சைக்கிளொன்றில் வீதி சமிக்ஞைகளை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துள்ளனர்.
எனினும் மோட்டார் சைக்களிலில் பயணித்தவர் பொலிஸாரின் சமிஞ்ஞையை உதாசீனம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றார்.
தனையடுத்து குறித்த நபரின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அடிப்படையாக வைத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை கண்டு பிடித்து வழக்கை பதிவு செய்தனர்.

அத்துடன் சந்தேக நபருக்க பொலிஸ் கட்டளை அனுப்பப்பட்டு, சந்தேகநபர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை சந்தேக நபரிற்கு, குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் ஒரு மாத கால சிறைத்தண்டனையையும் விதித்து உத்தரவிட்டார்.