Sunday, May 28, 2023
HomeStickerஇலங்கை வரும் விமானப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

இலங்கை வரும் விமானப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

நாட்டிற்கு வரும் விமானப் பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகள் அணிவதை தடை செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது.

நாட்டிற்குள் தங்கம் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தங்க கடத்தில் ஈடுபடுவதற்காக, அத்தியாவசிய முறையில் தங்க நகை அணிந்து விமான பயணிகளாக நாட்டிற்கு வரும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளரின்றி அனுமதியின்றி 22 கரட் தங்கத்திற்கு மேல் அணிந்துக் கொண்டு விமான பயணிகள் நாட்டிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

தங்க பொருட்களின் நிலைமைகள் மற்றும் அளவுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட தொழில்நுட்ப முறையை பயன்படுத்துவதற்கு சுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


அதற்காக வர்த்ததானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments