Sunday, May 28, 2023
HomeStickerபுகையிரம் - பஸ் மோதி கோர விபத்து! யாழில் சம்பவம் (Photos)

புகையிரம் – பஸ் மோதி கோர விபத்து! யாழில் சம்பவம் (Photos)

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று(01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையாக காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்றைய விபத்து சம்பவத்தினை அடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வந்திருந்த பொலிஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments