இந்தியாவின் அலியன்ஸ் எயர் விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி வாரத்தில் திங்கட் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழக் கிழமை, சனிக்கிழமை ஆகிய 4 நாட்கள் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் விமான சேவை மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பிர் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா பணியகத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.