எரிபொருள் நிரப்புவதற்காக பெண் ஒருவர் வாகனத்தை நிறுத்திய நிலையில், அங்கே அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள வின்ஸ்டன் சேலம் என்னும் நகரத்தைச் சேர்ந்த லவுரா கீன் என்ற பெண்ணுக்கே இந்த அதிர்ஷ்டம் டித்துள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சில பரிசு பொருட்கள் வாங்குவதற்காக தனது ஆண் நண்பருடன் டிரக்கில் சென்று கொண்டிருந்துள்ளார் லவுரா கீன்.
அப்போது ட்ரக்கில் எரிபொருள் குறைவாக இருப்பதாக அவருக்கு எச்சரிக்கை கிடைத்திருக்கிறது.
இதன் காரணமாக வரும் வழியில் ஏதாவது எரிபொருள் நிலையத்தில் வாகனத்திற்கு எரிபொருளை நிரப்ப வேண்டும் என்ற திட்டத்துடன் லவுரா பயணித்துள்ளார்.
அப்போது கெர்நெர்ஸ்வில்லே என்னும் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனத்தை நிறுத்திய லவுரா, அங்கே எரிபொருளும் நிரப்பி உள்ளார்.
இந்த சமயத்தில் அங்கிருந்து கடைக்குள் லவுரா மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் எதேச்சையாக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது லொட்டரி வாங்கியுள்ளனர். அப்படி ஒரு சூழலில், அவர்கள் வாங்கி இருந்த லொட்டரிக்கு தான் மிகப்பெரிய பரிசு தொகை விழுந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு தொகை லவுராவுக்கு கிடைத்துள்ளது.
இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை அறிந்து திக்குமுக்காடி போன லவுரா, நாங்கள் வந்த வாகனத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டியிருந்ததால் மட்டுமே அங்கே நிறுத்தினோம் என்றும், இல்லாவிட்டால் அங்கே லொட்டரி வாங்கி இருக்க மாட்டோம் என்றும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.