Saturday, December 9, 2023
HomeSlideவடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே மரணம்!

வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே மரணம்!

இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முன்னாள் ஆளுநராகவும் கடமையாற்றியவர்.நேற்று இரவு அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

திடீர் சுகயீனம்
வாதுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார்.


ரெஜினோல்ட் குரே பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அம்பியுலன்ஸ் ஊடாக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும்ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டதாக களுத்துறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments