ஜோதிடத்தின் அடிப்படையில் பெப்ரவரி 2023 மாதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் சனி கும்பத்திற்குப் பெயர்ச்சி ஆன நிலையில், அங்கு சுக்கிரன், சனி சேர்க்கை நிகழ்கிறது.
தொடர்ந்து சூரியனும் கும்ப ராசிக்கு இந்த மாத நடுவில் மாறுவார். புதனும் கும்பத்தில் சேர உள்ளார். இப்படி பல கிரகங்கள் கும்ப ராசியில் கூடக்கூடிய நிலை உருவாகிறது.
மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு பல வகையில் பெப்ரவரி மாதம் சாதகமாக அமையும். தொழில், உத்தியோகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தத்டை விட அதிகம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது.
நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பல வாய்ப்புகள் கிடைத்து அதில் லாபம் பெறுவீர்கள். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உங்கள் உணவுப் பழக்கங்களை முறைப்படுத்துங்கள் . குடும்ப உறுப்பினர்களிடையே தவறான புரிதலுக்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால், கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசி சமாளிப்பது அவசியம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதமாக அமைய உள்ளது. நீங்கள் செய்யும் வேலை, தொழிலை மேம்படுத்த நல்ல ஆலோசனைகளும், புதிய தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவீர்கள்.
மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக கிடைக்கும். உங்களின் வாழ்க்கையை மேம்படக்கூடிய மாதமாக இருக்கும். வயிறு தொடர்பான சில பிரச்னைகள் மாத தொடக்கத்தில் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள், நிதானமாகவும் அமைதியாகவும் இருப்பது உடல் நலத்திற்கும் நன்மை தரும். உங்கள் செயல்களுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
கன்னி : முதல் பாதியில் உங்களின் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இருப்பினும் பெரிய ஈர்ப்புடன் செயல்பட மாட்டீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்டு கடினமாக உழைத்தால் மட்டுமே லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதும், உடற்பயிற்சி செய்வது அவசியம்.உறவுகள் குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக முதல் பாதியில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மூத்த உடன்பிறந்தவர்கள், மேலதிகாரிகள், சக ஊழியர்களிடமிருந்து ஆதரவும், பாராட்டும் பெறுவீர்கள். வணிகத்தில் வெளிநாட்டிலிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும்.
மேலும், உங்களின் மன நிலை அமைதியற்றதாக இருக்கும். தேவையற்ற மனக்குழப்பத்தைத் தவிர்க்கவும். யோகா தியானத்தை செய்வது நல்லது.திருமணம், காதல் உறவுகளில் ஏற்ற, தாழ்வுகள் நிறைந்திருக்கும். காதல் உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பின் நெருக்கம் அதிகரிக்கும்.
தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதி நிலை உயரக்கூடியதாக இருக்கும். உங்கள் தொழில், வியாபாரத்தில் மேன்மை அடைவீர்கள். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நினைத்த இலக்குகளை அடைய அதிக முயற்சி தேவைப்படும்.
ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மன அமைதி, நேர்மறை சிந்தனையுடன் எந்த விஷயத்திலும் செயல்படுவது நல்லது.
உங்கள் உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. தெளிவான பேச்சால் நீங்கள் மற்றவர்களையும், அவர்கள் உங்களையும் புரிந்து கொள்வார்கள். இந்த மாதம் உங்கள் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளன.