Tuesday, March 21, 2023
HomeSlideஇலங்கை மீண்டும் இருளில் மூழ்கும் அபாயம்!

இலங்கை மீண்டும் இருளில் மூழ்கும் அபாயம்!

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.


கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக மேலும், இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments