Sunday, May 28, 2023
HomeStickerயாழ் பாடசாலை மாணவிக்கு வந்த மெசேஜ் ! பின்கதவால் வெளியேறிய ஆசிரியர்!

யாழ் பாடசாலை மாணவிக்கு வந்த மெசேஜ் ! பின்கதவால் வெளியேறிய ஆசிரியர்!

யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவரின் பெயரில் தொலைபேசி வழியாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் மாணவியின் பெற்றோருடன் சிலர் பாடசாலை வாயிலில் கூடியிருந்தனர். இதனால் குறிப்பிட்ட ஆசிரியர் அச்சம் காரணமாக பாடசாலை பின் கதவால் வெளியேறியிருக்கின்றார்.

பொலிஸாருக்கு தகவல்
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தை ஆய்வு செய்தனர். இதன் போது, அது அந்த ஆசிரியருடையது அல்ல என தொியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments