சந்நிதியான் ஆச்சிரமத்தால் சிறுவர்கள், கர்ப்பவதிகளுக்கு 63,000 ரூபா சத்துமா பொருட்கள் வழங்கப்பட்டது
தொண்டைமானாறு தெற்கு, கெருடாவில் தெற்கு பிரதேசங்களில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்கள், கர்ப்பவதிகள் அடங்களாக 3000 ரூபா பெறுமதியான சத்துணவுப் பொருட்கள் ( பயறு, உழுந்து, கௌப்பி, சோளம், கடலை, அரிசி, சீனி) 21 பேருக்கு 1ம் கட்டமாக வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக மாதாந்தம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ் உதவித் திட்டம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

