Sunday, October 1, 2023

தனது சகோதரியின் திருமண தினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் , மணப்பெண்ணின் சகோதரனான 15 வயது மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் ஹந்தபாங்கொட கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த ஹந்தபாங்கொட தேசிய பாடசாலையின் தரம் 10இல் கல்வி கற்கும் பிம்சர பிரபோத் ரணசிங்க என்ற மாணவனே விபத் தில் உயிரிழந்துள்ளார்.


மணப்பெண்ணான சகோதரிக்கு இவர் ஒரேஒரு சகோதரன் என்றும் இங்கிரிய பொலிஸார் கூறியுள்ளனர்.

திருமண நிகழ்வுக்கு மணமகனின் தந்தையுடன், திருமண புகைப்படத்துடன் திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவனும் மற்றைய நபரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையிஒல் உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை இன்று (25) ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக தெரிவித்த இங்கிரிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments