Sunday, October 1, 2023
HomeStickerமாணவனை தாக்கிய மகாஜன ஆசிரியர் பொலிசாரால் கைது ! குடும்பத்தை மிரட்டும் ஆசிரியர்கள்

மாணவனை தாக்கிய மகாஜன ஆசிரியர் பொலிசாரால் கைது ! குடும்பத்தை மிரட்டும் ஆசிரியர்கள்

வலிகாம பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் அதே பாடசாலைச் சேர்ந்த மூன்று மாணவர்களை நேற்று வெள்ளிக்கிழமை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் தெல்லிப்பழைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவது குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் அவர்களை கையால் தாறுமாறாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவனின் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்றைய மாணவன் வீட்டில் மயக்கமுற்ற நிலையிலும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் குறித்த பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரை மிரட்டும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

அதாவது பாதிக்கப்பட்ட மாணவனின் அண்ணன் அதே பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் குறித்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டால் கபொத சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற விடமாட்டோம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் குறித்த ஆசிரியர் தெல்லிப்பழை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த விடையம் தொடர்பில் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது

RELATED ARTICLES

Most Popular

Recent Comments