Sunday, October 1, 2023
HomeStickerகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஹயஸ் வாகனம் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்து நேற்று (4) நள்ளிரவு 12 மணியளவில் கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையில் 212வது கல்லு பகுதியில் இடம்பெற்றுள்ளது.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தையடுத்து டிப்பர் வாகனம் அங்கிருந்து சென்ற நிலையில் பொதுமக்கள் உதவியுடன் ஹயஸ் வாகனத்திலிருந்த 7 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு 1990 அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments