Sunday, October 1, 2023
HomeStickerமாணவன் தாக்கப்பட்ட விவகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு

மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறிக்கை கேட்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் தகவல்களை மூடி மறைக்கும் நிர்வாகம் என்னும் தலைப்பில் வெளிவந்த செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயம் சம்பந்தப்பட்டவர்களிடம் அறிக்கை கோரியுள்ளது.

1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.

குறித்த செய்தியில் தென்மராட்சியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்கும் மாணவனை அதே
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் தாக்கிய நிலையில் தலையிலும் முகத்திலும் தாக்குதலுக்குள்ளான மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை (19.06.2023)சாவகச்சேரி அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலானது அரசியலமைப்பின் உறுப்புரை 11 கீழ் அடிப்படை உரிமை மீறல் என்பதுடன் இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரிவு 308A தண்டிக்கப்படகூடிய குற்றமுமாகும்.

மேற்படி பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் தங்களால் மேற்கொள்ளப்ட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தங்களது விளக்க அறிக்கையினை எதிர்வரும் 30,06,2023 இற்கு முன் எமக்கு அனுப்பிவைக்குமாறு தென்மராட்சி வலையக்கல்விப் பணிப்பாளர் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தலைமை பொலிஸ் பரிசோதகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது

RELATED ARTICLES

Most Popular

Recent Comments