Sunday, October 1, 2023
HomeStickerபாடசாலையில் இருந்து மகளை அழைத்துச்சென்ற இளம் தம்பதியினர் கோர விபத்தில் உயிரிழப்பு !

பாடசாலையில் இருந்து மகளை அழைத்துச்சென்ற இளம் தம்பதியினர் கோர விபத்தில் உயிரிழப்பு !

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள்மீது லொறி மோதியதில் பாடசாலையில் இருந்து மகளை அழைத்துச்சென்ற இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

அமில புஷ்பசிறி (34) மற்றும் அவரது மனைவி சத்துரராணி குமாரி (33) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பாடசாலைக்கு சென்ற தம்பதி
குருணாகல் கட்டுவன மஹிந்த கல்லூரியில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் தமது ஒரே மகளை அழைத்துச் செல்வதற்காகச் சென்றபோதே தம்பதியினர் இந்த விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.


அதிவேகமாக வந்த லொறி மோட்டார் சைக்கிளை மோதியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments