நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர விசேட தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவையே ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவை
நல்லூர் ஆலய திருவிழாவுக்காக வருகின்ற பக்தர்களின் நலன்கருதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர விசேட அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக பதுளை ஓடிசி, சீதாவாகை ஓடிசி போன்று யாழ்ப்பாணம் ஓடிசி தொடருந்து சேவை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.