Saturday, December 9, 2023
HomeSlideஇலங்கையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு  நடவடிக்கைகள்

இலங்கையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு  நடவடிக்கைகள்

எல்லை பாதுகாப்பு இலங்கையில் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் எல்லை பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி உள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத ஆட் கடத்தல் நடவடிக்கைகள் கொழும்பின் ஊடாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டவிரோத ஆட்கடத்தில் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் எல்லை பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் இலங்கையிலிருந்து சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் 102 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி கடவுச்சீட்டு, போலி விசா உள்ளிட்ட மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கவும் வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளவும் வெளிநாட்டு பிரதிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனர்களைப் போன்ற தோற்றமுடைய  இந்திய தம்பதியினர் போலியான முறையிலான சீன கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி செல்ல முற்பட்டபோது அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டிலும் இவ்வாறான 137 சம்பவங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments