Saturday, December 9, 2023
HomeSlideநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழா இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் திருவிழாக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆலய சூழலில் பக்தர்கள் இளைபாறுவதற்கான கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஆலய வீதியை சுற்றி சிவப்பு வெள்ளை கொடிகள் ஆலயத்தினரால் கட்டப்பட்டு வருகின்றன.

கொடிகள் கட்டப்பட்டு எல்லைப்படுத்தப்படும் ஆலய சூழலில் வியாபார நடவடிக்கைகள், யாசகம் பெறல், விளம்பர நடவடிக்கைகள் என்பவை மோற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு வருவோர் அப்பிரதேசத்திற்குள் காலணிகளுடன் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments