Saturday, December 9, 2023
HomeSlideக.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் - திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் – திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments