Saturday, December 9, 2023
HomeSlideஇஞ்சி-மஞ்சள் தண்ணீரின் நன்மை

இஞ்சி-மஞ்சள் தண்ணீரின் நன்மை

நாம் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியமான நாளாக மாற்ற காலை உணவு மிக முக்கியமானதாகும். அதிலும் நாம் காலையில் என்னென்ன உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது இன்னும் முக்கியமானதொன்று.

அந்தவகையில் காலையில் ஆரோக்கிய பானங்களை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி தினமும் காலையில் இஞ்சி-மஞ்சள் தண்ணீர் குடித்தால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

இஞ்சி-மஞ்சள் தண்ணீரின் நன்மை

இஞ்சியும் மஞ்சளும் இயற்கையாகவே உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடியது. இந்த இரண்டையும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

  • இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரோவும் மஞ்சளில் குர்குமின் என்ற சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு சேர்மானங்கள் ஆகும். இதனால் காலையில் இஞ்சி – மஞ்சள் பானத்தை குடிப்பதால் உடலில் ஏற்படும் அழற்சி குறைக்கும், மூட்டு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
  • சிறந்த செரிமானத்திற்கு தேவையான நொதியங்கள் சுரப்பதை இந்த இஞ்சி மஞ்சள் தண்ணீர் ஊக்குவித்து செரிமான கோளாறு பிரச்சினைகளை தீர்க்கிறது.
  • காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி மஞ்சள் பானம் குடித்தால் உடலை ஆக்ஸிடே்டிவ் ஸ்ட்ரஸிலிருந்து பாதுகாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி நோயெதிர்ப்பு அமைப்பை வலுவாக்கும்.
  • இஞ்சியும் மஞ்சளும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், இஞ்சி ரத்த நாளங்களை விரிவுப்படுத்த உதவுகிறது.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இஞ்சி மஞ்சள் தண்ணீரை குடிப்பதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments