Sunday, October 1, 2023
Homeஅறிவியல்பித்ரு தோஷம் என்றால் என்ன அதற்குரிய அறிகுறிகள்

பித்ரு தோஷம் என்றால் என்ன அதற்குரிய அறிகுறிகள்

பொதுவாக நம்முடைய முன்னோர்களை முறையாக வழிப்படாதோருக்கு இந்த பித்ரு தோஷம் ஏற்படுகிறது.

குறித்த தோஷத்தினால் பாதிக்கப்பட்டோர் அவர்களின் வாழ்க்கையில் அதிகமாக கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.

அத்துடன் குடும்பத்தில் குழந்தை பிறப்பது தாமதமாகும் அல்லது தடைப்படும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் பித்ரு தோஷம் என்றால் என்ன? அதற்கான பரிகாரங்களையும் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக வீடுகளில் இருக்கும் முன்னோர்கள் இறந்த பின்னர் அவர்களை கணக்கு கூட எடுக்காமல் இருக்கும் பொழுது வீடுகளில் பணம், சொத்து, பொன், பொருள், என அனைத்திலும் பிரச்சினைகள் ஏற்படுவது “பித்ரு தோஷம்” எனப்படுகிறது. இந்த கூற்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பித்ரு தோஷத்திற்கான அறிகுறிகள்

1. வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள்,

2. பணம், சொத்து, பொன், பொருள் நஷ்டம் ஏற்படல்

3. குழந்தை தரிக்க தாமதமாகுதல்

4. மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும்.

5. தேவையில்லாத பிரச்சினைகள் வீடு தேடி வரும்.

1. பறவைகளுக்கு உணவளித்தல்.

2. அமாவாசை அன்று வெள்ளைப் பசுவிற்கு பசும்புல் கொடுத்தல்.

3. காசிக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நன்று.

4. பித்ரு தோஷத்திற்கான நிவாரண பூஜை செய்தல்,

புராணங்களில் கூறிய பரிகாரங்கள்

1. அமாவாசை, பௌர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வழிபாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.

2. அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் எண்ணெய் தீபம் ஏற்றல். எந்த காரணம் கொண்டும் தீபம் அணையக்கூடாது.

3. ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தல்.

4. ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments