Saturday, December 9, 2023
HomeSlideஇலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

இலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை – ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு மேலதிகமாக காலி, அம்பலாந்தோட்டை, கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பலத்த மழை
இதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் இன்று பிற்பகல் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments