Jaffna Newsபுதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

-

- Advertisment -spot_img

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது பீடத்தைச் சேர்ந்த புதுமுக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வருத்தமடைகின்றோம்.

சம்பவம் தொடர்பாக அறிந்தவுடன் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் நானும் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் பார்வையிட்டதுடன், வைத்திய நிபுணர்களிடமும் கலந்துரையாடினோம்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடமிருந்தும், மாணவனிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை மற்றும் மாணவர் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை, பல்கலைக்க்கழக உபவிதிகளுக்கு அமைய, கிடைக்கப்பெறும் விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் ஊடாகப் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

பேரவைத் தீர்மானத்துக்கமைய குற்றமிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய பொலீஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா, இனிமேல் நீங்க வெள்ளை சர்க்கரை யூஸ் பண்ணவே மாட்டீங்க!

எந்த சத்துக்களும் இன்றி ரசாயனங்கள் மட்டுமேயான வெள்ளைச் சர்க்கரை நம் உடலுக்குள்சென்றதும் குளோக்கோசாகவும் ப்ருக்டோசாகவும் பிரியும். குளுக்கோஸ் எளிதில் ஜீரணமாகும்.. ஆனால் ப்ரக்டோஸ் ஈரலால் மட்டுமே ஜீரணிக்க...

மினுவாங்கொடை வீதித் தடையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்...

தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து வந்த சுமார் 49 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு.!!

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக்...

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி கடிதம்

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும்...
- Advertisement -spot_imgspot_img

ஆனையிறவு உப்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஆனையிறவு உப்பு - இதன் ஊடாக...

யாழில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுப் பிரவீன் சம்பவ இடத்திலேயே பலி!!

யாழ் சுன்னாகம் பழனிகோவிலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதான சிவராசா பிரவீன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் அதி வேகமாகச் சென்றதன் காரணமாகவே...

Must read

இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா, இனிமேல் நீங்க வெள்ளை சர்க்கரை யூஸ் பண்ணவே மாட்டீங்க!

எந்த சத்துக்களும் இன்றி ரசாயனங்கள் மட்டுமேயான வெள்ளைச் சர்க்கரை நம் உடலுக்குள்சென்றதும்...

மினுவாங்கொடை வீதித் தடையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை...
- Advertisement -spot_imgspot_img

You might also likeRELATED
Recommended to you